அடுத்தடுத்து திரைக்கு வரும் ஜி.வி.பிரகாஷின் 2 படங்கள்
Advertisement
Advertisement
அடுத்தடுத்து திரைக்கு வரும் ஜி.வி.பிரகாஷின் 2 படங்கள்
மார் 25, 2024
அ நிறம் | அளவு
Advertisement
ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்த ரெபல் என்ற படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. அடுத்து ஏப்ரல் நான்காம் தேதி அவர் நடித்துள்ள ‛கள்வன்" என்ற படம் திரைக்கு வருகிறது. பி.வி.ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் இவானா, பாரதிராஜா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். வனம், யானை வாழ்விடம் ஆகியவற்றின் பின்னணியில் இந்தப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை அடுத்து ஏப்ரல் பதினொன்றாம் தேதி ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ள இன்னொரு படமான ‛டியர்" திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டியர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, ஆனந்த் ரவிச்சந்திரன் என்பவர் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!