
கமலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் ஹீரோ
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் கமல்ஹாசன் இந்த படத்தை பார்த்து ரசித்ததுடன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோவும் படத்தின், தயாரிப்பாளருமான நடிகர் சவுபின் சாஹிர் தற்போது கமலை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றுள்ளார். இந்த சந்திப்பின்போது படத்தின் ஒளிப்பதிவாளர் சைஜு காலித்தும் உடன் இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கமலை மஞ்சு மேல் பாய்ஸ் பட குழுவினர் சந்தித்தபோது சவுபின் சாஹிர் வேறொரு படப்பிடிப்பில் இருந்ததால் அந்த சமயத்தில் அவரால் கமலை சந்திக்க முடியவில்லை என்பதால் சற்று தாமதமாக அவரை சந்தித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் சவுபின் சாஹிர், துல்கர் சல்மானின் நண்பனாக பல படங்களில் இணைந்து நடித்துள்ளதுடன் அவரை வைத்து பறவ என்கிற படத்தை இயக்கி இயக்குனராகவும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!