
அடுத்தடுத்த அப்டேட்கள் கொடுத்த கமல்ஹாசன்
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரது அடுத்தடுத்த படங்கள் பற்றிய அப்டேட்களைக் கொடுத்துள்ளார். அதில் "இந்தியன் 3" படத்தையும் முடித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். "இந்தியன் 2" படத்திற்கான பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகிறது, அதன்பின் "இந்தியன் 3" பின் தயாரிப்புப் பணிகள் ஆரம்பமாகும் என்றும் கூறியிருக்கிறார். இதன் மூலம் "இந்தியன் 3" படம் பற்றி உறுதியாகி உள்ளது.
தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்தான் கமல்ஹாசன் மீண்டும் "தக் லைப்" படத்தில் நடிக்க உள்ளாராம். அப்படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்புதான் அன்பறிவ் இயக்க உள்ள படத்தில் நடிப்பார் என்கிறார்கள். அதனால், அடுத்தடுத்து கமல்ஹாசன் நடிப்பில் ஐந்து படங்கள் வெளியாகப் போகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!