
இனிமேல் - அப்பா கமல்ஹாசன் தயாரிப்பில், மகள் ஸ்ருதிஹாசனின் தாராளக் கவர்ச்சி
இந்த ஆல்பத்தில் ஸ்ருதிஹாசனின் தாராள கவர்ச்சி ஒரு அதிர்ச்சி என்றால் மற்றொரு அதிர்ச்சியாக ஸ்ருதிஹாசன் ஜோடியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்திருப்பதும் அமைந்துள்ளது. இன்ஸ்டா, பேஸ்புக், எக்ஸ் என எந்தப் பக்கம் போனாலும் இளம் ரசிகர்கள் இதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி பேச வேண்டும் என்பதால் இப்படி ஒரு ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்களா என்ற கேள்வியும் எழுகிறது. ஸ்ருதியுடன் லோகேஷ் இவ்வளவு நெருக்கமாக நடித்திருப்பது ரசிகர்களை வியப்படையவும் வைத்துள்ளது. "என்னப்பா லோகி இது ?" என பல ரசிகர்கள் கேட்டுள்ளார்கள். விரைவில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
குடும்பத் தயாரிப்பு என்று சொன்னாலும், குடும்பத்துடன் பார்க்கக் கூடிய தயாரிப்பு அல்ல என்பது மட்டும் "இனிமேல்" டீசரைப் பார்த்ததும் புரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!