
ஷங்கரின் கேம் சேஞ்சர் ஓடிடி உரிமை, இவ்வளவு விலையா ?
இதனிடையே, இப்படத்தின் ஓடிடி உரிமை சுமார் 100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுவும் தென்னிந்திய மொழிகளுக்கான உரிமை மட்டும்தானாம். ஹிந்தி உரிமையையும் சேர்த்தால் அது 150 கோடியைத் தொடும் என்கிறார்கள். மேலும், படத்தின் சாட்டிலைட் உரிமைகளையும் சேர்த்தால் படத்திற்காகப் போட்ட பட்ஜெட்டை இவற்றிலேயே மீட்டுவிடுவார்களாம்.
தியேட்டர் வியாபாரம், அதற்கான வசூல் மற்றவர்களுக்கான வருமானம். ஓடிடி, சாட்டிலைட்டில் மட்டுமே போட்ட முதலீட்டை "டேபிள் பிராபிட்" ஆக எடுத்து விடுவதால்தான் இத்தனை வருட தாமதத்திற்கும் தயாரிப்பாளர் தில் ராஜு வருத்தப்படவேயில்லை என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!