
தனுஷ் 51வது படத்தின் தலைப்பு ‛குபேரா : முதல்பார்வை வெளியீடு
தனுஷின் 51வது படமாக உருவாகும் இந்தபடம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் மகா சிவராத்திரியான இன்று மார்ச் 8ம் தேதி இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. முதலில் மாலை 4:05 மணிக்கு வெளியிடுவதாக சொன்னார்கள். தொழில்நுட்ப பிரச்னையால் மாலை 6:30 மணிக்கு வெளியிட்டார்கள்.
படத்திற்கு ‛குபேரா" என பெயரிட்டுள்ளனர். சுவர் ஒன்றில் கடவுள் சிவன் யாசகம் பெறுவது போன்ற ஓவியம் வரைந்து இருக்க, அதன் அருகில் அழுக்கான கிழிந்த ஆடை, தாடி எல்லாம் வைத்து ஒரு பிச்சைக்காரர் போன்ற தோற்றத்தில் தனுஷ் உள்ளார். தனுஷின் தோற்றம், படத்தின் தலைப்பு நேர் எதிராக உள்ளது. ஒருவேளை படத்தின் கதைக்களமே இதுபற்றி கூட பேசலாம். படத்தின் டைட்டில் போஸ்டர் 4 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!