
விஜய் - வினோத் கூட்டணி உறுதி?
அந்த 69வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது குறித்து கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பலரது பெயர்கள் அடிபட்டு வந்தன. இந்நிலையில் இயக்குனர் எச். வினோத், அந்த 69வது படத்தை இயக்க உறுதி செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
கமலின் 233வது படத்தை எச் வினோத் இயக்குவதாக அறிவிப்பு வந்தது. ஆனால், அப்படம் "டிராப்" எனத் தகவல் வெளியானது. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அடுத்து தனுஷ் அல்லது யோகி பாபு படத்தை வினோத் இயக்கப் பேச்சுவாத்தை நடத்தி வருவதாகவும் சொன்னார்கள்.
விஜய்யை சந்தித்தும் வினோத் ஒரு கதை சொன்னாராம். அந்தக் கதை பிடித்துப் போகவே விஜய்யும் சம்மதம் சொல்லிவிட்டாராம். தற்போதைய நிலவரப்படி இதுதான் விஜய் 69 படத்தின் அப்டேட்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!