
25வது நாளைக் கடந்த ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன்
இருந்தாலும் சில படங்கள் சில தியேட்டர்களில் சில காட்சிகளாவது ஓடி 25வது நாளைக் கடக்கின்றன. அந்த விதத்தில் கடந்த மாதம் 25ம் தேதி வெளியான "ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன்" ஆகிய படங்கள் 25 நாட்களைக் கடந்துள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். அந்தப் படங்கள் சென்னை உள்ளிட்ட மாநகரங்ளில் இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதே தினத்தில் வெளியான "தூக்குதுரை" படமும் 25 நாளைக் கடந்துள்ளதாக அப்படக்குழுவினரும் அறிவித்துள்ளார்கள். அவர்கள் நான்கு தியேட்டர்களில் ஓடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த 2024ம் ஆண்டில் வெளிவந்த படங்களில் "அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சாப்டர் 1" ஆகிய படங்கள் 25 நாட்களைக் கடந்து ஓடியுள்ளன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!