
நிஜ கதையில் சஞ்சனா நடராஜன்
இதுகுறித்து சஞ்சனா நடராஜன் கூறியிருப்பதாவது : இந்த படத்தில் நான் ரிஷிகா என்ற மருத்துவ மாணவியாக நடித்திருக்கிறேன். கிட்டத்தட்ட எனது நிஜ கேரக்டரை பிரதிபலிக்கிற மாதிரியான கேரக்டர். நண்பர்கள் குழுவைச் சுற்றி சுழலும் இந்தக் கதை அவர்களின் கடந்த கால சம்பவங்கள் எப்படி தற்போதைய வாழ்க்கையை பாதிக்கிறது என்பதைக் கூறும். இது அரசியல் விஷயங்களைப் பேசுவதோடு, சில சமூகப் பிரச்சினைகளையும் சொல்லி இருக்கிறது. படக்குழுவில் உள்ள அனைவரும் உற்சாகத்தோடு வேலை செய்தோம். இயக்குநர் பிஜாய் நம்பியாரும் படத்தை தெளிவான பார்வையோடு கொண்டு சென்றார். இந்த படத்தில் எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தக் கதை நிஜ சம்பவங்களின் அடிப்படையில் உருவானது" என்கிறார் சஞ்சனா நடராஜன்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!