
எஸ்.ஜே.சூர்யாவை இயக்கும் ராஜூ முருகன்
பிப் 09, 2024
Advertisement
ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களை இயக்கியவர் ராஜூ முருகன். இதில் கடைசியாக கார்த்தி நடிப்பில் அவர் இயக்கி வெளியான ஜப்பான் படம் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் அடுத்தபடியாக எஸ். ஜே.சூர்யாவை நாயகனாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப் போகிறார் ராஜூ முருகன். டாடா படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் இப்படத்தை தயாரிக்கிறது. மற்ற நடிகர்-நடிகைகள், டெக்னீசியன் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களை தொடர்ந்து தற்போது இந்தியன்- 2, கேம் சேஞ்சர், தனுஷ் 50வது படம், எல்ஐசி போன்ற படங்களில் நடித்து வரும் எஸ். ஜே. சூர்யா இந்த படங்களை தொடர்ந்து ராஜூமுருகன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!