
ரீமேக் ஆகிறது ஆடி வெள்ளி : நயன்தாரா நடிக்கலாம்
இந்நிலையில், 34 வருடங்களுக்குப் பிறகு "ஆடி வெள்ளி" படம் ரீமேக் செய்யப்படுகிறது. இதுகுறித்து ராம.நாராயணனின் மகனும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான முரளி ராமசாமி கூறியதாவது:
ஆடி வெள்ளி நம் மண்ணின் நம்பிக்கைகளோடு சேர்ந்த படம் என்பதால் பெண்கள் அதனை வெற்றிப் படமாக்கினார்கள். இப்போதும், கொண்டாடப்படும், பேசப்படும் படமாக ஆடி வெள்ளி இருக்கிறது. இன்றைய காலத்துக்கும், டெக்னாலஜிக்கும், டிரெண்டுக்கும் ஏற்ப படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளோம். இப்படத்திற்கு, கிராபிக்ஸ் பணிகள் அதிகம் தேவைப்படும். அதை உள்வாங்கி இயக்கும் இயக்குநரை வைத்து எடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.
தற்போது, திரைக்கதையை டிரெண்டுக்கு ஏற்றவாறு மெருகூட்டும் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ் சினிமாவில் விலங்குகளை பயன்படுத்த நிறைய கட்டுப்பாடுகளையும் விதிகளையும் கடைபிடிக்க வேண்டியுள்ளது. விலங்குகளை பயன்படுத்தும்போது, மிகவும் பாதுகாப்பாக எடுக்க வேண்டியுள்ளது. இந்த சவால்களையெல்லாம் திறமையாக கையாள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் நயன்தாரா நடித்தால் சிறப்பாக இருக்கும். இதற்காக அவரை அணுக முடிவு செய்திருக்கிறோம். என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!