
ஓடிடி தளத்தில் ஆங்கிலத்திலும் சலார்
இப்படம் ஓடிடி தளத்தில் கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. அப்போதே விரைவில் ஆங்கிலத்திலும் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ஆங்கில டப்பிங்கை நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் உலக அளவில் இந்திய மொழிகளைத் தெரியாதவர்கள் கூட இப்படத்தைப் பார்க்கலாம். இதற்கு முன்பு விஜய் நடித்து வெளிவந்த "லியோ" படத்தின் ஆங்கில டப்பிங்கும் ஓடிடி தளத்தில் வெளியானது.
ஹிந்தியில் மட்டும் ஓடிடியில் இன்னும் வெளியாகவில்லை. எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியீடு என்ற ஒப்பந்தம் இருப்பதால் இந்த மாதக் கடைசி வாரத்தில்தான் ஹிந்தியில் வெளியாகும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!