
ஷெரினாவுக்கு பாலியல் தொல்லை, கொலை மிரட்டல் : 2 பேர் சிறையில் அடைப்பு
ஷெரினாவின் மேலாளர் கவுரி ஜெகநாதன் கடந்த மாதம் 20ம் தேதி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஷெரினாவிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் ஷெரினாவுக்கு போன் மூலம் தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும், சில்மிஷத்தில் ஈடுபட முயன்றதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் அண்ணாசாலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை ஷெரினாவின் கார் ஓட்டுநரான திருவள்ளூரை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளையராஜா ஆகிய இருவரை மயிலாடுதுறையில் வைத்து போலீஸார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் நடிகை ஷெரினா கார் ஓட்டுநர் கார்த்திக்கை சில பிரச்சினை காரணமாக வேலையில் இருந்து நீக்கியதால் ஆத்திரமடைந்த கார்த்திக் தனது கூட்டாளி இளையராஜா உடன் சேர்ந்து நடிகையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதும் போனில் கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!