
மீண்டும் சிரஞ்சீவி ஜோடி : த்ரிஷா மகிழ்ச்சி
இந்நிலையில் 2018ல் வெளிவந்த "96" படம் அவருக்கு அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்தது. "பொன்னியின் செல்வன்" படத்திலும் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து வியக்க வைத்தார் த்ரிஷா.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஜோடியாக கடந்த வருடம் வெளிவந்த "லியோ" படத்தில் நடித்தார். அது போல, தற்போது அஜித் ஜோடியாக "விடாமுயற்சி" படத்தில் நடித்து வருகிறார். அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் "தக் லைப்" படத்திலும் இணைந்துள்ளார்.
இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ள "விஷ்வம்பரா" படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். த்ரிஷாவை வரவேற்று சிரஞ்சீவி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து த்ரிஷா, “18 வருடங்களுக்குப் பிறகு "ஒன் அன்ட் ஒன்லி" மெகாஸ்டாருடன் மீண்டும் இணைவது பெருமை. உங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றி சிரு சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் ஜோடியாக 15 வருடங்களுக்குப் பிறகு "லியோ"" படத்தில் நடித்த த்ரிஷா, அதையும் தாண்டி 18 வருட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவியுடன் நடிக்க உள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!