
5 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் நிஹாரிகா
படத்தின் நாயகியாக நிஹாரிகா நடிக்கிறார். இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிஹாரிகா 2018ம் ஆண்டு விஜய்சேதுபதி ஜோடியாக "ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்" படத்தில் நடித்தார். அதன் பிறகு இப்போதுதான் நடிக்கிறார். தெலுங்கில் சில படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள நிஹாரிகா தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரும், நடிகருமான நாகேந்திர பாபுவின் மகள் ஆவார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்து சமீபத்தில் கணவரை விவாகரத்து செய்தார். தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!