
ரசிகன், கேப்மாரி படங்கள் அந்த மாதிரியான படங்கள்தானே? : எஸ்ஏ சந்திரசேகரை கேள்வி கேட்கும் ரசிகர்கள்
மகன் விஜய் கதாநாயகனாக நடிக்க அப்பா எஸ்ஏ சந்திரசேகரன் இயக்கிய சில படங்களில் ஆபாசமான காட்சிகளும், இரட்டை அர்த்த வசனங்கள், பாடல்கள் ஆகியவையும் இடம் பெற்றதுண்டு. அந்தக் காலத்தில் அப்படியானவற்றை வைத்துத்தான் மகன் விஜய்க்கு வியாபார ரீதியாக ஒரு ஆரம்பத்தை எஸ்ஏ சந்திரசேகர் ஏற்படுத்தி வைத்தார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.
இந்நிலையில் நேற்று முன்தினம் எழில் இயக்கத்தில் வர உள்ள "தேசிங்குராஜா 2" பட நிகழ்ச்சியில் எஸ்ஏ சந்திரசேகரன் பேசுகையில், "லியோ" படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் அதன் இயக்குனர் பெயரைக் குறிப்பிடாமல் அந்தப் படத்தைப் பற்றி விமர்சித்திருந்தார். மேலும், நல்ல விஷயங்களை படமாக எடுங்கள் என்றும் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
அவரது பேச்சு ஏற்றுக் கொள்ளும் ஒரு விஷயமாக இருந்தாலும், அந்தக் காலத்தில் மகன் விஜய்யை வைத்து நீங்கள் இயக்கிய படங்கள் பல தரமற்ற படங்களாக இருந்ததே என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். குறிப்பாக "ரசிகன்" படத்தில் கதாநாயகி சங்கவி, இவரது அம்மா ஸ்ரீவித்யா ஆகியோருக்கு விஜய் சோப்பு போட்டுத் தேய்த்துவிடும் காட்சியெல்லாம் நல்ல விஷயங்களா என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அதோடு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 2019ல் ஜெய், அதுல்யா, வைபவி சாண்டில்யா நடித்து "ஏ" சான்றிதழ் பெற்று வெளிவந்த "கேப்மாரி" படம் " அந்த மாதிரியான" படம்தான் என கிண்டலடிக்கிறார்கள். அவர்களில் சிலர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களாகக் கூட இருக்கலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!