நான்கு நாட்களில் 50 கோடி வசூலித்த அயலான்
ஜன 16, 2024
Advertisement
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 12ம் தேதி திரைக்கு வந்த படம் அயலான். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரித்தது. இப்படம் திரைக்கு வந்தபோது கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் குழந்தைகளுக்கு பிடித்தமான படமாக இருக்கும் என்று விமர்சனங்கள் வெளியானதை அடுத்து தற்போது குடும்பம் குடும்பமாக அயலான் படம் ஓடும் தியேட்டரை நோக்கி படையெடுக்க தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று அயலான் படத்தை தயாரித்திருக்கும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளது. அதில், அயலான் படம் நான்கு நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். விரைவில் இந்த படம் 100 கோடி வசூல் சாதனை கிளப்பில் இணையும் என தெரிகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!