
லோகேஷ் கனகராஜை தொடர்ந்து ரஜினியை இயக்கும் நெல்சன், மாரி செல்வராஜ்!
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை அடுத்து மாரி செல்வராஜ், நெல்சன் ஆகியோர் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து ரஜினி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. மாமன்னன் படத்திற்கு பிறகு ரஜினியை சந்தித்து மாரி செல்வராஜ் ஒரு கதை சொல்லியிருப்பதாக கூறப்படும் அதேவேளையில், ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை ரஜினியை சந்தித்து நெல்சன் கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. என்றாலும் இது குறித்து ரஜினி தரப்பில் இருந்தோ, சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் தரப்பிலிருந்தோ எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!