
அமெரிக்க தொழிலதிபருடன் திருமணம் ஆகிவிட்டதா? - அஞ்சலி அளித்த பதில்
இந்த நேரத்தில் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் அஞ்சலி செட்டிலாகி விட்டதாகவும், படங்களில் நடிப்பதற்காக மட்டுமே அவர் இந்தியா வருவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛சினிமாவில் எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் நான் நட்பு ரீதியாக பழகினாலும் கூட கிசுகிசு எழுதி வருகிறார்கள். முதலில் நடிகர் ஜெய்யை நான் காதலிப்பதாக செய்தி வெளியிட்டார்கள். அதையடுத்து இப்போது தொழிலதிபரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக எழுதுகிறார்கள். எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் ஆகிவிட்டதாக இவர்கள் எழுதுவதை பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது. சினிமா நடிகை என்பதால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று அவர்கள் இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள்"" என்று தெரிவித்துள்ளார் அஞ்சலி.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!