
விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று ஆறுதல் சொன்ன சிவகுமார், சூர்யா, கார்த்தி : கலங்கிய சூர்யா
தற்போது ஒவ்வொருவராக வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சரத்குமார், சசிகுமார், சிவகுமார், கார்த்தி ஆகியோர் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கடந்த இரண்டு நாட்களில் அஞ்சலி செலுத்தினர். வெளிநாட்டிலிருந்து மும்பை திரும்பிய சூர்யா, இன்று சென்னைக்கு வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் மாலை அணிவித்தும், சமாதி முன்பு அமர்ந்து சில நிமிடங்கள் அமர்ந்தும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
பத்திரிகையாளர்களிடம் அழுது கொண்டே பேசுகையில் விஜயகாந்துடன் இணைந்து "பெரியண்ணா" படத்தில் நடித்த நாட்களை நினைவு கூர்ந்தார். ‛‛அண்ணனைப் போல யாரும் இல்லை. இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாமல் போனது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் மறைந்தாலும் எப்போதும் அவரின் நினைவு இருக்கும்"" என்றார்.
அதன்பின்பு சூர்யா, கார்த்தி அவர்களது அப்பா சிவக்குமார் ஆகியோர் விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று அங்கு அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!