
சோசியல் மீடியா ஒரு காலத் திருடன்- தனுஷ் வெளியிட்ட எச்சரிக்கை செய்தி!!
அதையடுத்து தனுஷ் பேசும்போது, ‛‛சமூக வலைதளம் என்பது மிகப்பெரிய காலத் திருடன். அது உங்களுக்கே தெரியாமல் உங்களின் நேரத்தை திருடிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி நான்கு பேர் ஒன்றாக இருக்கும்போது ஒருவருக்கு ஒருவர் முகம் பார்த்து பேசுவது தான் சிறப்பாக இருக்கும். ஆனால் அதை தவிர்த்து விட்டு மொபைலில் முகம் பார்த்து பேசுவது வேண்டாம்"" என்று கூறினார். அதோடு, ‛‛வளர்ந்து வரும் காலகட்டத்தில் அனைத்துமே சமூக வலைத்தளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளப்படுகிறது. எதையும் அளவாக பயன்படுத்தினால் அனைவருக்கும் நல்லது"" என்றும் தனுஷ் பேசியது கவனம் பெற்றுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!