
விஜயகாந்த்திற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சரத்குமார்
தற்போது சென்னை திரும்பி உள்ள சரத்குமார், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தில் மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ‛‛விஜயகாந்த் முழுமையாக குணமாகி வருவார் என நம்பினேன். அவர் மறைந்த நாளை கருப்பு தினமாகவே கருதுகிறேன். தொடர்ந்து 5 படங்களில் எனக்கு வாய்ப்பு தந்தார். தனக்கு போட்டியாக வந்துவிடுவேன் என கருதாமல் தொடர்ந்து அவர் தயாரிக்கும் படங்களில் என்னை நடிக்க வைத்தார். விஜயகாந்த்தின் சிறந்த பண்புகள், குணாதிசயங்களை நாம் பின்பற்ற வேண்டும்"" என்றார்.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!