
சினிமாவில் 20 ஆண்டுகள் : எல்லாம் உங்களால்தான் என உருகும் நயன்தாரா
சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "நான் 20 ஆண்டுகளை கடந்தும் இங்கே நிற்பதற்கு ரசிகர்களாகிய நீங்கள்தான் காரணம். எனக்கு உந்து சக்தியாகவும், இதய துடிப்பாகவும் இருந்தீர்கள். நீங்கள் இல்லாமல் சினிமா வாழ்க்கை பயணம் முழுமையடையாது. 20 ஆண்டு மைல் கல்லை எட்டுவதற்கு எனது பயணத்தை வடிவமைத்து ஊக்கமளிக்கும் சக்தியாக நீங்கள் இருந்ததை கொண்டாடுகிறேன்.
எனது ஒவ்வொரு திட்டத்தையும் வெற்றியாக மாற்றிய மந்திரம் நீங்கள்தான். இந்த மைல்கல்லை நான் கொண்டாடும் போது, இந்த இரண்டு தசாப்தங்களாக சினிமாவில் உருவான நம்பமுடியாத, ஆதரவான மற்றும் ஊக்கமளிக்கும் சக்தியை நான் கொண்டாடுகிறேன். எப்போதும் உங்கள் அன்பு எனக்கு வேண்டும்” என்று எழுதியிருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!