
கொலை படம் எடுப்பவர்கள் கொலைகாரர்கள்: தங்கர் பச்சான் தாக்கு
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு இயக்குனர் தங்கர் பச்சான் பேசியதாவது: டாக்டர் வீரபாபு தனது சித்த மருத்துவத்தின் மூலம் பலருக்கு சேவையாற்றி உள்ளார். இந்த படத்தின் மூலம் சிறந்த கருத்தை முன் வைத்துள்ளார். அவரைப் போன்றவர்கள் தமிழ் மண்ணுக்கு கிடைத்த கொடை. தமிழ் மக்கள் தமிழ் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இப்போது சினிமா என்கிற அற்புதமான கலை, வியாபாரமாக பார்ப்பவர்கள் கையில் சிக்கி உள்ளது. எந்த படத்தை குழந்தைகளுக்கு காட்ட கூடாதோ, மனதை சிதைக்கிறதோ அந்த படங்களை ஊக்குவிக்கிறார்கள். நல்ல படங்களை பார்ப்பது இல்லை. படத்தில் ஐம்பது கொலைகள் இருந்தால் நடிகருக்கும் இயக்குனருக்கும் அதிக சம்பளம்.
கொலைகளை வைத்து படம் எடுக்கும் எல்லோரும் கொலைகாரர்களே. சினிமாவை ஒரு கொள்ளையடிக்கும் தொழிலாக வைத்துக்கொண்டு மக்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று சிந்திக்கும் ஒரு கூட்டம் உள்ளது. இது பெரிய குற்றம். கொலைகளை ரசிக்கும் மன நிலைக்கு மக்களை கொண்டு வந்து விட்டனர். என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!