
பிராங் வீடியோ பின்னணியில் உருவான படம்
படம் பற்றி இயக்குனர் கெவின் ஜோசப் கூறியதாவது: பொதுமக்கள் உணர்ச்சிகளோடு விளையாடும் பிராங் ஷோக்களுக்கு எதிராக கொதிக்கிற நாயகன், அதை நடத்தும் பெண்ணை காதலிக்கிறான். காதலுக்கு அண்ணன் எதிர்ப்பு தெரிவிக்க காதல் ஜோடி ஊரை விட்டு ஓட... அதன்பிறகு அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இது ஒரு பயணத்தில் செல்லும் காதல் கதை. சிவகார்த்திகேயன் நடித்த "மனம் கொத்திப் பறவை "போல் காதலர்கள் செய்யும் பயணம் தான் இப்படம். காதல், நட்பு, நகைச்சுவை, ஆக்ஷன் என அனைத்தும் கலந்த படம்.
கும்பாரி என்றால் குமரி மண்ணின் வட்டார மீனவ மக்கள் வழக்கில் நண்பன் என்று பொருள். இந்தப் படம் ஒரு காதல் கதை தான் என்றாலும் நட்பை பற்றியும் இப்படம் பேசுகிறது. குமரி மண்ணின் அழகும், மண் மணக்கும் மொழியும், பாடல்களும் படத்திற்கு வேறு நிறம் காட்டுகின்றன. இப்படத்தில் காதல், நகைச்சுவை, நட்புடன் கலந்து சமகாலச் சமூகப் போக்கையும் பிரதிபலித்துக் கதை உருவாகியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!