
தள்ளிப் போகிறதா தங்கலான் ?
ஆனால், தற்போதைய தகவலின்படி படம் மேலும் சில மாதங்கள் தள்ளிப் போகலாம் எனத் தெரிகிறது. படத்தின் இறுதிக் கட்டப் பணிகளை முடிக்க இன்னும் கொஞ்சம் தாமதம் ஆகலாம் என்பதும் ஒரு காரணம். பிரீயட் பிலிம் என்பதால் படத்தைப் பார்த்துப் பார்த்து செதுக்கிக் கொண்டிருக்கிறார்களாம். சமீபத்தில் கூட விக்ரமை வைத்து சில காட்சிகளை மீண்டும் ரீ-ஷுட் செய்தார்களாம்.
அடுத்த வருடம் தமிழ் சினிமாவில் பல முக்கியமான படங்கள் வெளிவர உள்ளன. பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்த "அயலான்" பட வெளியீட்டிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அடுத்து "தங்கலான்" தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இனி, படங்கள் முழுமையாகத் தயாரானால் மட்டுமே வெளியீட்டுத் தேதியை அறிவிக்க வேண்டிய சூழலில் தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!