
அரசு உடன் கைகோர்ப்போம் : கமல் பதிவு
நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், ‛‛அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம். மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும்படி மக்கள் நீதி மையம் உறவுகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்"" என குறிப்பிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!