
பருத்தி வீரன் பஞ்சாயத்து : கமா போட்ட சசிகுமார்
ஆனால், அமீரின் நண்பரும், இயக்குனரும், நடிகருமான சசிகுமார், “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது. அமீர் அண்ணன், ஞானவேல்ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன ?. "நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுததி இருந்தால்…" என்று குறிப்பிட்டு சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன ?.
திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம் ?.
இதன் மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல்ராஜா சொல்ல வருவது என்ன ?.
பெயரிப்படாத அந்தக் கடிதம் யாருக்கு ?,” என சசிகுமார் சில பல கேள்விகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், இதற்கு "கமா" போட்டு தொடர வைத்துள்ளார் சசிகுமார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!