டிமான்டி காலனி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. தொடர்ந்து இமைக்கா நொடிகள் படத்தை இயக்கினார். அவர் இயக்கத்தில் கடைசியாகப் வெளிவந்த " கோப்ரா" திரைப்படம் தோல்வி அடைந்தது . இதனால் அவர் பல விமர்சனங்களுக்கு ஆளானார். தற்போது "டிமான்டி காலனி 2" படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து. இதைத்தொடர்ந்து அவர் அடுத்து ஹிந்தியில் நடிகர் அஜய் தேவ்கனை வைத்து படம் இயக்க அழைப்பு வந்ததாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர் .
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!