
தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் தற்போது புதிய படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதற்கு "ஜி ஸ்குவாட்" எனப் பெயர் வைத்துள்ளார். அந்த லோகோவில் தேள் படம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
நிறுவனத்தில் முதலில் நெருங்கிய நண்பர்கள், உதவியாளர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். விரைவில் தனது முதல் தயாரிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிகரகமாக வலம் வரும் இளம் இயக்குனர்கள் சிலர் இப்படி சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது சிறப்பான ஒன்று.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!