
கார்த்திக்கு கோல்டன் ஸ்டார் பட்டம் கொடுத்த ஜப்பான் படக்குழு!
இந்த நிலையில் இன்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள டச்சிங் டச்சிங் என்ற பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையில் அருண் ராஜா காமராஜ் இந்த பாடலை எழுதியிருக்கிறார். அதோடு கார்த்தி இந்த பாடலை பின்னணி பாடியிருக்கிறார். அவருடன் இணைந்து இந்திராவதி சவுகான் என்பவரும் பாடியுள்ளார். அதோடு இந்த பாடல் வீடியோவில் இப்பாடலை பாடியவர் உங்கள் கோல்டன் ஸ்டார் ஜப்பான் என்ற சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டத்தை இந்த பாடலுக்காகதான் கொடுத்தார்களா? இல்லை இந்த படத்தின் டைட்டில் கார்டிலும் கார்த்திக்கு கோல்டன் ஸ்டார் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளதா? என்பது படம் திரைக்கு வரும்போது தெரியவரும்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!