
துபாய் தொழிலாளர்களுடன் தீபாவளி கொண்டாடிய கார்த்தி
முகாமிற்கு சென்ற கார்த்தி இனிப்பு, பரிசு பொருட்கள் வழங்கி மகிழ்ந்தார். அவர்களிடையே பேசிய கார்த்தி, “குடும்பத்துக்காக வலிகளை சுமக்கும் நீங்கள்தான் உண்மையான ஹீரோக்கள். நான் நிழல் ஹீரோதான். துபாயில் இப்படியும் கஷ்டப்படும் தொழிலாளர்களை இப்போதுதான் பார்க்கிறேன். ரோலக்ஸ் மற்றும் ராக்கெட் ராஜா இருவரின் கலவையாக ஜப்பான் கதாபாத்திரம் இருக்கும்” என்றார்.
இந்தியாவில் இருந்து தங்களை பார்க்க வந்த முதல் நடிகர் நீங்கள் தான் என அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர். பொதுவாகவே நடிகர்கள் தங்களது படங்களை துபாயில் உள்ள ஷாப்பிங் மால்கள் அல்லது நட்சத்திர ஹோட்டல்களில் விளம்பரம் செய்வார்களே தவிர துபாயில் இதுபோன்ற கடினமான பணி செய்யும் தொழிலாளர்களை சந்தித்ததே இல்லை. நடிகர் கார்த்தியின் இந்த பெருந்தன்மையால் அனைத்து தொழிலாளர்களும் மிகவும் மனம் நெகிழ்ந்து காணப்பட்டதுடன் ஒரு சினிமா நட்சத்திரத்தை இவ்வளவு அருகில் நெருக்கமாக பார்த்தது குறித்து தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!