
விஜய் அரசியலுக்கு வர வெற்றிமாறன் நிபந்தனை
அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: சினிமா நல்ல விதமான தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது, கெட்ட விதமான தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது. நிறைய நல்ல உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறது. உதாரணமாக, "ஜெய்பீம்" படத்தால் பழங்குடி மக்களுக்குப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. விஜய் அரசியலுக்கு வருதற்கான வேலைகளைச் செய்து வருகிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எல்லாருக்கும் அரசியலுக்கு வருதற்கான உரிமையிருக்கிறது. ஆனால், அதற்கு முன் அவர்கள் களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும். அதன் பிறகு அரசியலுக்கு வரவேண்டும். விஜய்யும் முதலில் களத்தில் இறங்கி வேலை செய்தபிறகு அரசியலுக்கு வரவேண்டும். என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!