
சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன், மீண்டும் பைக் ஓட்டுவேன் : ஜாமீனில் விடுதலையான டிடிஎப் வாசன் பேட்டி
விடுதலையான வாசன் சிறை வாசலில் நிருபர்களிடம் கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது என்னை திருத்துவதற்காக அல்ல. என் வாழ்க்கையை அழிப்பதற்காக செய்த மாதிரி இருக்கிறது. எனது கை முறிந்தது பற்றி கூட நான் கவலைப்படவில்லை. ஆனால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதை அறிந்தபோது அழுதேன். ஆனால் நான் கட்டாயம் பைக் ஓட்டுவேன்.
எனது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்வேன். சர்வதேச ஓட்டுனர் உரிமம் பெற்று மீண்டும் வாகனம் ஓட்டுவேன். திரைப்படங்களிலும் தொடர்ந்து நடிப்பேன். என்னை பார்த்து குழந்தைகள், சிறுவர்கள் கெட்டுப்போகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை நான் ஏற்க மாட்டேன். வித்தியாசமாக எதை பார்த்தாலும் அவர்கள் ஈர்க்கப்படுவது இயற்கையே. பெற்றோர்கள்தான் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
நான் என்ன கிரிமினல் குற்றவாளியா? எதற்காக என்னுடைய பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரியவில்லை. இதுவரை நான் நேபாளம் மட்டுமே சென்றுள்ளேன். உலகம் முழுக்க செல்ல வேண்டும் என்பது என் கனவு.
இவ்வாறு அவர் கூறினார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!