
விஜய் 68வது படத்தில் இணைந்த அஜ்மல்
இதில் மைக் மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என தகவல் வெளியானது. தற்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜ்மல் நடித்து வருவதாக கூறப்பட்டு வந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் விஜய் 68வது படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் அஜ்மல் உள்ள போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அஜ்மல் ஏற்கனவே தமிழில் ‛‛கோ, அஞ்சாதே, இரவுக்கு ஆயிரம் கண்கள், நெற்றிக்கண்"" ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இது அல்லாமல் மலையாள, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!