
சினிமா ஆகிறது டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்து?
மூழ்கிய டைட்டானிக் கப்பலை நீர்மூழ்கி கப்பலில் சென்று பார்த்து வருவதை தனி சுற்றுலாவாக நடத்தி வருகிறார்கள். இதற்காக சில நிறுவனங்கள் உள்ளன. இதற்கு பல கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பலில் 5 கோடீஸ்வரர்கள் பயணித்தார்கள். புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பேரழுத்தம் காரணமாக நீர்மூழ்கி வாகனம் உடைந்ததில், அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த விபத்தை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் உருவாக இருப்பதாகவும், அதை பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் ஜேம்ஸ் கேமரூன் அதை மறுத்தார்.
இந்நிலையில் மைண்ட் ரியாட் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் இந்தச் சம்பவத்தை படமாக்க இருப்பதாகத் அறிவித்துள்ளது. "சால்வேஜ்ட்" (காப்பாற்று) என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி விட்டதாகவும், விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!