
டைகர் 3ல் ரேவதி: ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார்
படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டது. அதன் மூலம் தெரிய வரும் கதை இதுதான். தன் மனைவி கேத்ரீனா கைப் மற்றும் மகனுடன் அமைதியான வாழ்க்கை வாழும் "டைகர்" சல்மான் கானிடம் நாட்டைக் காக்கும் புதிய பொறுப்பு வழங்கப்படுகிறது. சல்மான் கானால் பாதிக்கப்பட்ட இம்ரான் ஹாஷ்மி தற்போது புதிய வில்லனாக உருவெடுத்து பழிவாங்குகிறார். அவரிடமிருந்து நாட்டையும், குடும்பத்தையும் காப்பதற்காக சல்மான் கான் போராடுவதுதான் கதை. நாடு முக்கியமா? குடும்பம் முக்கியமா? என்ற கேள்விக்கு பதிலாக சல்மான்கான் அதாவது டைகர் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் திரைக்கதை.
இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் இந்த படத்தில் ரேவதி ராணுவ உயர் அதிகாரியாக நடித்துள்ளார். ஏற்கனவே பல ஹிந்தி படங்களில் ரேவதி நடித்திருக்கிறார், ஹிந்தி படத்தை இயக்கி இருக்கிறார் என்றாலும் பல நூறு கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள ஒரு கமர்ஷியல் படத்தில் அவர் இப்போதுதான் நடித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!