
அமெரிக்க முன்பதிவில் லியோ சாதனை
இந்நிலையில் தற்போது முன்பதிவில் மட்டுமே ஒரு மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பாக, "கபாலி, பொன்னியின் செல்வன் 1" ஆகிய படங்கள் இப்படி முன்பதிவில் ஒரு மில்லியன் யுஎஸ் டாலரை வசூலித்துள்ளது. தெலுங்குப் படமான "ஆர்ஆர்ஆர்" படத்திற்குப் பிறகு ஒரு இந்தியத் திரைப்படம் இந்த சாதனையை இப்போதுதான் புரிகிறது. இதனால், "லியோ" படம் அமெரிக்க வசூலில் புதிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் மட்டுமல்லாது தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் பலவற்றிலும் படத்திற்கான முன்பதிவு முந்தைய தமிழ்ப் படங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!