
ஒரே படத்தில் போலீஸாகவும் வழக்கறிஞராகவும் நடிக்கும் ரகுமான்
அந்த வகையில் தற்போது முதன் முதலாக பாலிவுட்டில் நுழைந்துள்ளதுடன் அமிதாப்பச்சனின் மகனாகவும் கண்பத் என்கிற படத்தில் நடித்துள்ளார் ரகுமான். இந்த படம் வரும் அக்டோபர் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அவர் மார்சியல் ஆர்ட்ஸ் கோச் ஆக நடிக்கிறார்.
தமிழில் அவர் ‛நிறங்கள் மூன்று, அஞ்சாமை" ஆகிய படங்களில் நடித்து முடித்து விட்டார். இதில், நீட் தேர்வுக்கு எதிரான கருத்துக்களுடன் உருவாகியுள்ள அஞ்சாமை படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாகவும், வழக்கறிஞராகவும் என இரண்டு வித கதாபாத்திரங்களில் அதே சமயம் டபுள் ஆக்சன் ரோலாக இல்லாமல் ஒரே ஆளாக நடித்துள்ளார். நீட் தேர்வு விஷயத்தில் நீதியை நிலை நாட்டுவதற்கு தனது காக்கி யூனிபார்ம் தடையாக இருக்கிறது என்பதால் அந்த வேலையை ராஜினமா செய்துவிட்டு கருப்பு கவுன் மாட்டிக்கொண்டு வழக்கறிஞராக சட்டத்துடன் போராடும் இரு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நடிகர் ரகுமான்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!