
அனிமல் நீ வாடி.. - 3 நிமிடப் பாடலில் 3 முத்தம்…
இப்பாடல் வெளியீட்டிற்காக நேற்று வெளியிட்ட போஸ்டரில் ரன்பீர், ராஷ்மிகா இருவரும் உதடோடு உதடு வைத்து முத்தமிட்ட புகைப்படம் இருந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது. இன்று வெளியான அப்பாடல் 2 நிமிடங்கள் 45 விநாடிகள் மட்டுமே இருந்தது. அந்த மூன்று நிமிடப் பாடலுக்குள் ரன்பீர், ராஷ்மிகா இருவரும் மூன்று முறை உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் காட்சி இடம் பெற்றிருக்கிறது.
ராஷ்மிகா இதுவரையில் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்திருந்தாலும், ஹிந்திப் படம் என்றதும் இப்படி முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார் என பேசப்படுகிறது. அங்கெல்லாம் தாராளமாக நடித்தால்தான் மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். அதனால், இப்படி நடித்திருப்பாரோ என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!