
ரஜினி 170 வது படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கியது
நெல்லை மாவட்டம் பனங்குடிக்கு ரஜினி காரில் சென்ற போது காருக்குள் இருந்தபடியே ரசிகர்களுடன் கைக்குலுக்கிய வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரஜினியின் 170வது படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!