
முதன் முறையாக பஞ்சாரா மொழியில் பாடிய சித்ரா
இந்த நிலையில் முதன்முறையாக பஞ்சாரா மொழியில் ஒரு பாடலை பாடியுள்ளார். பஞ்சாராவில் பாரம்பரிய உடையை அவர் அணிந்து வந்து இந்த பாடலை பாடியது தான் இதில் ஹைலைட்டான அம்சம். ஆம்தர் நிவாஸ் என்கிற படத்திற்காக தான் இந்த பாடலை பாடியுள்ளார் சித்ரா. விநாயக் பவார் என்பவர் எழுதியுள்ள இந்த பாடலுக்கு எம்.எல். ராஜா என்பவர் இசையமைத்துள்ளார்.
இந்த பாடலை சித்ராவுடன் இணைந்து எம் ஸ்ரீனிவாஸ் சவான் பாடியுள்ளார். சஞ்சீவ் குமார் ரத்தோர் என்பவர் இயக்கியுள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு முதன்முதலில் பஞ்சாரா மொழியில் பாடிய தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார் சித்ரா.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!