
2018 படம் ஆஸ்கர் விருது பெற ரஜினி வாழ்த்து
தற்போது தனது 170வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக திருவனந்தபுரத்தில் தங்கி இருக்கிறார் ரஜினி. அவர் 2018 படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினரை வரவழைத்து நேரில் சந்தித்து, அவர்கள் ஆஸ்கர் விருதை வென்று வர வாழ்த்தி இருக்கிறார். இந்த சந்திப்பு தொடர்பாக படத்தின் இயக்குனர் ஜுட் ஆண்டனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் "தலைவர் “என்ன படம் ஜூட், எப்படி எடுத்தீர்கள்? அற்புதம். போய் ஆஸ்கார் கொண்டு வாருங்கள், என் ஆசிகள் மற்றும் பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும் என்று வாழ்த்தினார். இந்த மறக்க முடியாத அனுபவத்திற்கு கடவுளுக்கு நன்றி. அன்புத் தோழி சவுந்தர்யாவிற்கும் நன்றி” என்று எழுதியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!