
விஜய் சொன்ன ஆபாச வார்த்தைக்கு நானே பொறுப்பு: லோகேஷ் கனகராஜ்
பலரும் அந்த வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் கூறியதாவது: படத்திற்கு தேவைப்பட்டதால் டிரைலரில் அந்த வார்த்தையும் இடம்பெற்றுள்ளது. அப்பாவியான ஒருவர் தான் இருந்த அழுத்தமான மனநிலை சூழலில் பேசியுள்ளதை காட்சிப்படுத்தி இருக்கிறேன். அந்த வார்த்தையால் யாரின் மனது புண்பட்டாலோ, யாரேனும் கண்டனத்தை தெரிவித்தாலோ, அதற்கு முழு பொறுப்பு நானே. அதற்கும் நடிகர் விஜய்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
அந்த வசனம் இடம்பெற்ற காட்சி உட்பட 6 நிமிட காட்சிகளை ஒரே ஷாட்டில் நாங்கள் படம்பிடித்தோம். காலையில் படப்பிடிப்பு தொடங்கும்போதே, வசனங்களை பார்த்துவிட்டு நான் கட்டாயம் அந்த வார்த்தையை பேச வேண்டுமா? என விஜய் கேட்டார். கதாபாத்திரத்திற்கு அவை தேவைப்படுகிறது என கூறி நானே விஜயை பேசவைத்தேன். அவர் பொதுவாக இயக்குனர் கூறும் விஷயங்களை செய்ய வேண்டும் என நினைப்பார். அதில் மறுப்பு சொல்ல விரும்பமாட்டார். இவ்விவகாரத்தில் தயக்கம் இருந்ததும், என்னிடம் மீண்டும் கேட்டார். நான் கூறியதால் அதனை பேசினார். அதற்கு நானே பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!