
தூள் கிளப்பிற்லாம் : ரஜினி 171வது படம் குறித்து லோகேஷ்!
இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் இப்போது லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு வருகிறார். இதில் ரஜினிகாந்த் 171வது படம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கூறியதாவது: "ரஜினி 171வது படம் நான் இதுவரை இயக்கிய படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும். எனக்கு இது ஒரு புதிய முயற்சி. இந்த கதையை 20 நிமிடம் ரஜினி சாரிடம் கூறினேன். சமீபத்தில் ரஜினி சார் உடன் இப்படம் குறித்து போனில் பேசும் போது "தூள் கிளப்பிற்லாம் கண்ணா" என ரஜினி சார் கூறினார். இரண்டு வாரத்திற்கு முன்பு இந்த படத்திற்காக ஆபிஸ் பூஜை நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரலில் துவங்கும்" என தெரிவித்தார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!