
ரஜினியின் 170வது படத்திற்கு இப்போதே கிளம்பிய எதிர்ப்பு
இன்னொரு பக்கம் சோசியல் மீடியாவில் இப்போதிருந்தே ஒரு தரப்பினர் இந்த படத்திற்கான தங்களது எதிர்ப்பினை "வன்னியர் பாய்காட் ரஜினிகாந்த்" என்கிற ஹேஷ்டேக் மூலமாக வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த கோபம் நேரடியாக ரஜினிகாந்த் மீது இல்லை. இந்த படத்தை இயக்கும் டிஜே ஞானவேல் மீதுதான்.
ஏற்கனவே அவர் இயக்கிய ஜெய் பீம் படத்தில் தங்களது வன்னியர் சமுதாயத்தை பற்றி தவறான பிம்பம் ஏற்படுத்தும் விதமாக சில கதாபாத்திரங்களை புகுத்தி சில சர்சசை கருத்துக்களையும் கூறியதாக அந்த படம் வெளியான சமயத்திலேயே மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது.
தற்போது அந்த இயக்குனரின் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதால் இப்போது புதிதாக இப்படி ஒரு எதிர்ப்பு தலைதூக்கி உள்ளது. ஜெய்பீம் படத்தில் நடைபெற்ற நிகழ்வுகளுக்காக டிஜே ஞானவேல் தனது தரப்பிலிருந்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இந்த படத்தை வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ரிலீசாகும்போது புறக்கணிக்க வேண்டும் என்றும் சோசியல் மீடியாவில் சில தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதே சமயம் இந்த படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தின் தமிழக சிஇஓ ஆக வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்களில் ஒருவரான ஜி கே மணியின் மகன் ஜி கே எம் தமிழ் குமரன் இருப்பதால் இந்த எதிர்ப்புகளை எல்லாம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் அழகாக சமாளித்து விடலாம் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!