
மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் இடம்பெற போகும் அல்லு அர்ஜுன் மெழுகுசிலை
சமீபத்தில் புஷ்பா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்ற முதல் தெலுங்கு நடிகர் என்கிற பெருமையும் அல்லு அர்ஜுனுக்கு சேர்ந்து கொண்டது. இந்த நிலையில் இன்னொரு சிறப்பம்சமாக அவரது மெழுகுசிலை துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் விரைவில் இடம்பெறப் போகிறது. இந்த சிலையை செய்ய தேவைப்படும் அல்லு அர்ஜுனின் 200 விதமான புகைப்படங்கள் மற்றும் அளவுகள் ஆகியவை சமீபத்தில் சிலை வடிவமைப்பாளர்களால் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ள அல்லு அர்ஜுன், "நான் சிறுவயதாக இருக்கும்போது இந்த மியூசியத்திற்கு வந்துள்ளேன். ஆனால் நானே இங்கே சிலையாக இடம் பெறப்போகிறேன் என நினைத்துக்கூட பார்த்தது இல்லை" என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!