
தணிக்கை குழு சான்றிதழ் வழங்க தயங்கிய படம்
படம் குறித்து தயாரிப்பாளர் மனோஜ் கிருஷ்ணசாமி கூறியதாவது : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் பின்னணியில் உருவாகி உள்ள படம். பாலியல் குற்றவாளிகள் தங்களின் பண பலத்தால் எளிதில் தப்பி விடுகிறார்கள். இதனால் தன் மகளை பலாத்கார சம்பவத்திற்கு பலிகொடுத்த ஆடுகளம் நரேன் தனக்கென்று ஒரு இளைஞர் படையை வைத்துக் கொண்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் பாலியில் குற்றவாளிகளை தண்டிக்கிறார். அவரிடம் ஒரு பெரிய உதவி கேட்டு கிராமத்திலிருந்து வருகிறார் நாயகி மேக்னா எலன். அது என்ன உதவி, அதை ஆடுகளம் நரேன் நிறைவேற்றினாரா? நாயகன் பாண்டி கமல் யார்? அவர் என்ன செய்தார் என்பதை சொல்லும் படமாக உருவாகி உள்ளது.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு சான்றிதழ் தரவே தயங்கினார்கள். பின்னர் ஒரு வழியாக அவர்களோடு வாதாடி போராடி 16 கட்டுகளுடன் ஏ சான்றிதழ் பெற்றோம். படத்தின் டிசைனில் நீதி தேவதையின் ஒரு கையில் அரிவாளும், தராசில் பணமும் இருப்பதாக வடிவமைத்து இருந்தோம். அதை மாற்றச் சொன்னவுடன் மாற்றிவிட்டோம். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!