
வாழ்க்கை இத்துடன் முடியவில்லை : இளைஞர்களுக்கு சமந்தா அட்வைஸ்
அதற்கு பதிலளித்த சமந்தா, “பொதுவாகவே இப்போது பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று புலம்புவதை பார்க்க முடிகிறது. இதுதான் அவர்களிடையே உள்ள மிக மோசமான எண்ணம். ஆனால் இங்கிருந்து தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. இந்த பயணத்தில் நீங்கள் எல்லாவித சிரமங்களையும் கஷ்டங்களையும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.
சில நேரங்களில் இப்படி பயணிக்கும்போது நீங்கள் முன்பு இருந்ததை விட மிக அதிக பலமானவர்களாக கூட மாறுவீர்கள். இது எனக்கே நடந்துள்ளது. 25 வயதுக்கு முன் இருந்த நான் வேறு. இதேபோன்று பல பிரச்சனைகளை சந்தித்து எனது வாழ்க்கையில் முன்பு இருந்ததை விட சந்தோசமாக, பலமானவளாக, பாசிட்டிவான நபராக மாறியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!