
7ஜி பிருந்தாவன் காலனி : அமெரிக்காவிலும் மறு வெளியீடு
நாளை மறுதினம் செப்டம்பர் 22ம் தேதி "7 ஜி பிருந்தாவன் காலனி" படத்தை மறு வெளியீடு செய்ய உள்ளனர். ஆந்திரா, தெலங்கானாவில் வெளியாகும் இப்படம் அமெரிக்காவிலும் மறு வெளியீடு செய்யப்படுகிறது. அதற்கான தியேட்டர்களைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பொதுவாக மறு வெளியீட்டுப் படங்கள் இங்குதான் வெளியாகும். இப்போது அமெரிக்காவிலும் வெளியிட ஆரம்பித்துள்ளார்கள். இப்படத்தைத் தமிழிலும் மறு வெளியீடு செய்ய வேண்டும் என ரசிகர்கள் கேட்டுள்ளார்கள். கடந்த வருடங்களில் வெற்றிகரமாக ஓடிய படங்கள் இனி மறு வெளியீடாக அடிக்கடி வெளியிடப்படலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!